.

.

Wednesday, July 13, 2011

கதைகள் சொல்லாத இரவு

உனக்குக் கதைகள்
சொல்லாத இரவு
என்
இமைகளைத் திருடிச்
செல்கிறது ...

நீ 'ம்' சொல்லாததால்
எனது உறக்கம்
'ம்ஹூம்' சொல்கிறது ...

நீ கொண்டதெல்லாம்
பொய்க் கோபமாகட்டும் ...
வா ,
வந்து என் மடியில் உறங்கியபடி
கதை கேள்.

No comments: