.

.

Wednesday, July 13, 2011

உனக்காக நானிருப்பேன்

எத்தனை துன்பம்
வந்தாலென்ன
உனக்காக நானிருப்பேன்!

கண்ணீரைத் துடைக்க அல்ல
அன்பே எனது கைகள்
உன்னை கைகொடுத்து
காப்பாற்ற ...!

எனது நம்பிக்கையின்
நாயகனே நீ
கலங்கி நிற்கலாகாது...!

உனது
உள்ளம் எனது
உயர்ந்த கோபுரம் - அது
உடைந்து போகக் கூடாது ...!

நித்தம் நீ
சொல்லித் தந்தாய்
வாழ்க்கை என்பது
என்னவென்று...!

ஒவ்வொருநாளும்
நம்பிக்கை தந்தவனே
நீ கலங்கி நிற்கக் கூடாது...!

நீ
வருந்தாதே சித்திரமே
உனக்காக என்றும்
நானிருப்பேன்...!

No comments: