மண்குதிரை
சில சில்லறைக்
காசுகளை
அள்ளி வீசுவதால்
மட்டும் உள்ளங்கைகள்
சிவந்துவிடாது...
ஒரு கனிக்குள்
ஆயிரம் விதைகள்
என்றால் ஒரு
விதைக்குள் ஆயிரம்
கனிகள்...
நேற்றை விழுங்கி வந்த
நாள்தான் இன்று-
இன்று நேற்றாகும்போது
நாளை இன்றாகும்...
புல்-மான்-புலி
வட்டத்தில் புலி
முடிவின்மீது
மீண்டும் புல்
முளைக்கும்...
ஒரு துளிக் கண்ணீர்
துடைக்கின்ற பாசமும்
ஒரு கவலை
மறக்கவைக்கும்
ஆறுதலும்
பாலம் அமைக்கும்
ஆற்றைக் கடந்து செல்ல...
No comments:
Post a Comment