.

.

Saturday, October 30, 2010

என் மனம் ஒரு கண்ணாடி


என் மனம்
ஒரு கண்ணாடி
நீ
புன்னகைத்தால் என்
மனமும் புன்னகைக்கிறது

நீ
முகம் வாடினால்
என் மனதும்
வாடிப் போகிறது

உன் கூந்தல்
அலைப் பாய்ந்தால்
என் மனதும்
அலைபாய்கிறது

உன் கொலுசொலி
கேட்டால் என்
மனதும்
தாளம் போடுகிறது

உனக்கு சந்தேகமென்றால்
என் மனதை வந்து
பார் அது உன்னையே
பிரதிபலிக்கும்

ஞாபகத்தில் வை
என் மனம்
ஒரு கண்ணாடி
நீ காதல் சொன்னால்
அதுவும் காதல்
சொல்லும்

...நீ
கல்லெறிந்தால்
சுக்குநூறாய்
உடைந்து போகும் 


No comments: