.

.

Sunday, October 31, 2010

உனக்காக நானிருப்பேன்

நான் கொஞ்சிமகிழ ஓர்
உயிர் உருவானதை
எண்ணி எண்ணி
சுகமாய்
அனுபவித்துக் கொண்டிருந்தேன்
சிலநாட்களில் அது
அவளென்று அவனுக்குத்
தெரியவந்தது
அவன் அவர்களோடு
பேசி முடிவெடுத்தான்
அவளை கருவறுக்க
ஒரு மஞ்சள்
கயிற்றின்
முடிச்சுகளை
அவிழ்த்தெறிந்தேன்
என் உயிர்முடிச்சின்
உடனிருக்க...!


No comments: