.

.

Sunday, October 31, 2010

சுகமான தவிப்பு

சுகமான வாசனை - என்
சொர்க்கத்தின் வாசனை
எண்ணி எண்ணி
ஏங்க வைக்கும் - என்
இதயத்தின் வாசனை
நித்தம் நித்தம் வேண்டும்
உன் முத்தத்தின் வாசனை!

கண்ணைத் தோண்டி
காட்டில் விட்டாலும் -உன்
மணம் கண்டு ஓடி வருவேன்!

என்னை செவிடாக்கி
அலைய விட்டாலும் -உன்
குரல் கேட்டு
நீ இருக்கும்
திசை பார்த்து தேடி வருவேன்!

கனவுக்குள் கண்டுகொண்ட
கள்வனை காதலன் என்று
சொல்லலாம் -என்
உயிருக்குள் கண்டு கொண்ட
உன்னை என் உயிரென்று
சொல்லாமல் வேறு
என்னவென்று சொல்வது!

ஊமையான என் நெஞ்சம்
உன்னால் தான்
ஓயாத இன்பங்களை
சொந்தமாக்கியது!

நான்
பேராசைக்காரியும் அல்ல
கொடுமைக்காரியும் அல்ல
சின்னச் சின்ன
சந்தோசங்களுக்காக
ஏங்கும் ஒரு
பைத்தியக்காரி! 

No comments: