.

.

Saturday, October 30, 2010

ஆராரிரோ


தாலாட்டு பாடிடுவேன் ஆராரிரோ
தங்கமகளே கண்ணுறங்கு ஆராரிரோ
சீராட்டி வளர்த்திடுவேன் ஆராரிரோ
செல்லமகளே நீ உறங்கு ஆராரிரோ

முத்தங்கள் நான்தருவேன் ஆராரிரோ
முத்துமகளே கண்ணுறங்கு ஆராரிரோ
நித்தமும் கதைகள் சொல்வேன் ஆராரிரோ
நெஞ்சில் சாய்ந்து நீ உறங்கு ஆராரிரோ


No comments: