.

.

Saturday, July 23, 2011

உன்னைப் பற்றிய கவிதை...!

தமிழில் உள்ள
247 எழுத்துக்களும்
போட்டி போட்டுக் கொண்டு
முண்டியடித்து வருகின்றன...!

எழுதிய
எழுத்துக்களோ
குதூகலத்துடன்
குதித்து விளையாடுகின்றன
உனக்கு சொந்தமான
சந்தோசத்தில்

எழுதப்படாத
எழுத்துக்களோ
வரிசையில்
காத்திருக்கின்றன
அடுத்த வாய்பிற்காக!

அவைகளுக்கும்
கொஞ்சம்
வாய்ப்புக் கொடு
என்னையும்
கொஞ்சம்
எழுதவிடு...!

No comments: