.

.

Wednesday, November 17, 2010

நான் வணங்கும் தேவதையே

உவர்ப்பும் புளிப்பும்
அளந்துபார்த்து
எனக்கென ருசியாய்
உணவு சமைக்கிறாய் ...

புழுதியில்
புரண்டுவந்த
எனது சீருடைகள்
மின்னலடிக்கின்றன...
உன்னை அழுக்காக்கி 


வேப்பம்பூவின்
இனிப்பைப்
போல சுவையாய்
இருக்கிறது
உனது கோபம்...

வீதிவழியே
போகும்போதிலும்
நீ என்னை
மட்டுமே கண்டு கொள்ள
விரும்புகிறாய்..
.
கதைகள் சொல்லி
என்னை
உறங்கவைத்தபிறகு
நீ உறங்குகிறாயா
தெரியவில்லை...

பள்ளிக் காலத்தில்
தோழியாய்
இருந்து என்
படிப்புச்
சுமையை
சுகமாக்கினாய்...

சுமந்துபெற்ற
காரணத்தினால் தானோ
எப்போதும் நீ
என்னைச்
சுமப்பதிலேயே
சுகத்தைக் காண்கிறாய்...!

 

 

No comments: