.

.

Saturday, October 30, 2010

தேடுதல் பயணங்கள்


எங்கே ஆரம்பித்தது
என்று தெரியாமல்
எதற்காக எவ்விதம்
என்பது தெரியாமல்
தினம் தினம்
தொடர்கிறது
தீராத ஏக்கத்தின்
தேடுதல் பயணங்கள்,

பிறவிகள் தோறும்
அரங்கேறிடும்
பிறவிப் பெருங்கடல்
கடக்கின்ற தாகம்
உணர்வுகள் மங்கி
உணர்ச்சிகள் மேலிட
தடைபடுகிறது
தேடுதலின் பயணம்

எங்கோ ஒரு
பாதை வளைவினில்
யாரோ ஒருவரின்
வழிகாட்டுதலில்
உறக்கங்கள் கலைந்து
கனவுகள் முடிய
மீண்டும் தொடர்ந்திடும்
தேடுதலின் தாகம்

பயணப் பாதையின்
நிறைவில் தென்படும்
தெய்வீகத்தின்
பேரருள் நறுமணம்
பூக்கள் நிறைந்த ஓர்
புனிதப் பாதையில்
தென்றலைப் போன்றதோர்
ரகசியப் பயணம்

தெய்வீகத்தின் நிழலில்
தெய்வீகத்தின் அருளில்
வாழ்க்கைச் சுழற்சியின்
பயணங்கள் நிறைவு
உனது வடிவில்
கடவுளின் தரிசனம்-
நிறைவும் மரணமும்! 


No comments: