.

.

Thursday, October 28, 2010

காதல் செய்வோம்


நானென்றும்
நீஎன்றும்
சிலநேரம்
வாதம் செய்வோம்...!

தாயென்றும்
சேயென்றும்
சிலநேரம்
பாசம் கொள்வோம்...!

போ என்றும்
வா என்றும்
சிலநேரம்
பேசிச்செல்வோம்...!

உனதென்றும்
எனதென்றும்
சிலநேரம்
ஊடல் கொள்வோம்...!

அமுதென்றும்
விஷமென்றும்
சிலநேரம்
கற்றுக்கொள்வோம்...!

சரியென்றும்
தவறென்றும்
சிலநேரம்
காதல் செய்வோம்...!


No comments: