இப்போது பிரிவோம்
வாழ்க்கைப் பயணத்தின்
சாலைகள் பிரியுமிடத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
நீயும் நானும்
அவரவர் பயணம்
நிறைவாய் அமைந்திட
ஒருவருக் கொருவர்
பிரார்த்தனை செய்வோம்!
சந்தோசம் மலர்ந்திருக்கும்
இன்னொருநாளில் சந்திப்பதற்கு
இதயம் சிந்தும் கண்ணீரோடு
இப்போது பிரிவோம்
No comments:
Post a Comment