அழகான உன் கோபங்களில் என் பாசத்தின் மதிப்பைப் புரிந்து கொள்கிறேன் - உன் ஆழ்ந்த கண்ணீரில் நம் அன்பின் நீரோட்டம் உயிர்த்திருக்கிறது. என் காலங்கள் முடிகின்ற பொழுது உனது மடியில் தவமிருப்பேன் நிமிடங்கள், நாட்களில் முடிகின்ற பூமியின் சுழற்சிக்குட்பட்டதல்ல நம் காதல். முடிவில்லாத இந்தக் கனவு வட்டத்தில் மலர்கள் எப்போதும் வாடாதிருக்கும் என் முத்தங்களில் நீ மரணமடைந்து, நானாக உயிர்த்தெழுவாய். அப்போது நான் என்பது இல்லாமல் போய்விட்டிருக்கும் ஜென்மங்களில் இடைவெளிகள் மறைந்துவிட்டிருக்கும்.
நண்பர்களின் இதயமே
சந்தோசம்
குடிகொண்டிருக்கும் கோவில்...
No comments:
Post a Comment