எப்படித் தனியே பிரிந்து செல்லமுடியும்...?
யாரோ என்னவோ
சொன்னார்கள் என்பதற்காக
என்னைவிட்டுப்
பிரிந்து செல்லவும்
துணிந்துவிட்டாய்...
உன்னால்
அது முடியுமென்றால்
உனக்கு
அதுதான் விருப்பமென்றால்,
தாராளமாக பிரிந்து செல்...!
ஆனால்...,
உயிரை போலவே
எனக்குள்
இருக்கின்ற உன்னால்
எப்படித் தனியே
பிரிந்து செல்லமுடியும்...?
என்னைப் பொறுத்தவரை,
பிரிவென்று நீ
நினைத்தக்
கொண்டிருப்பதெல்லாம்
உன்னை நீயே
ஏமாற்றிக்
கொள்வதல்லாமல்
வேறொன்றுமில்லை.
No comments:
Post a Comment